சோதனை மேல் சோதனை: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திலிருந்து தெ.ஆ. வேகப்பந்துவீச்சாளர் விலகல்!

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக டேல் ஸ்டெய்ன், இந்த உலகக்கோப்பையின் முதல் இரு ஆட்டங்களில்...
சோதனை மேல் சோதனை: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திலிருந்து தெ.ஆ. வேகப்பந்துவீச்சாளர் விலகல்!

பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது வங்கதேசம். முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளதால் புதன் அன்று, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது தென் ஆப்பிரிக்க அணி.

எனினும் முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மேலும் சோதனைகளைச் சந்தித்து வருகிறது தென் ஆப்பிரிக்க அணி. இளம் வேகப்பந்துவீச்சாளரான லுங்கி என்கிடி, வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்துள்ளார். இந்தக் காயம் குணமாக 7 முதல் 10 நாள்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. 

இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திலிருந்து விலகியுள்ளார் என்கிடி. அடுத்த திங்கள் அன்று மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா விளையாடுகிறது. காயத்திலிருந்து குணமாகி, அந்த ஆட்டத்தில் என்கிடி விளையாடுவார் என தெ.ஆ. அணி நம்பிக்கையுடன் உள்ளது. 

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக டேல் ஸ்டெய்ன், இந்த உலகக்கோப்பையின் முதல் இரு ஆட்டங்களில் விளையாடவில்லை. ஆர்ச்சர் வீசிய பவுன்சர் ஹெல்மெட்டில் பட்டதால் காயமடைந்த ஆம்லா, வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆம்லா விளையாடுவார் என்று கூறப்படுகிறது. 

இதுபற்றி தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ பிளெஸ்ஸி கூறியதாவது:    

மிகவும் ஆக்ரோஷமாக விளையாடவேண்டும் என்று முதலில் நினைத்தோம். ஆனால் லுங்கி என்கிடிக்குக் காயம் ஏற்பட்டவுடன் நிலைமை மாறிவிட்டது. இதனால் 15 முதல் 20 ஓவர்களைச் சுழற்பந்துவீச்சாளர்களையும் மிதமான வேகப்பந்துவீச்சாளர்களையும் கொண்டு முடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முக்கிய வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் முதன்மையான திட்டம் போய்விட்டது. அடுத்தத் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com