ஆட்டம் கைவிடப்படுவதாக எடுக்கப்பட்ட முடிவு நல்லது: கோலி

நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக கைவிடப்படுவதாக எடுக்கப்பட்ட முடிவு நல்லது என்று இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். 
ஆட்டம் கைவிடப்படுவதாக எடுக்கப்பட்ட முடிவு நல்லது: கோலி


நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக கைவிடப்படுவதாக எடுக்கப்பட்ட முடிவு நல்லது என்று இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். 

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக் கோப்பை ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. 

இதையடுத்து, இந்திய கேப்டன் விராட் கோலி பேசுகையில், 

"தவான் இரண்டு வாரத்துக்கு கண்காணிப்பில் இருப்பார். பிந்தைய ஆட்டங்கள் மற்றும் அரையிறுதி ஆட்டங்களுக்கு அவர் தயாராகிவிடுவார் என்று எதிர்பார்க்கிறோம். அவர் உத்வேகத்துடன் இருக்கிறார். அவரை தக்கவைக்க விரும்புகிறோம். 

இந்த ஆட்டம் கைவிடப்படுவதாக எடுக்கப்பட்ட முடிவு நல்லது. மைதானம் விளையாடுவதற்கு தகுதியானதாக இல்லை. 

இதுவரை விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ள அணிக்கு, இந்த ஆட்டத்தில் ஒரு புள்ளி கிடைத்துள்ளது என்பது பிரச்னைக்குரியது அல்ல. அதனால், நாங்கள் அதை எடுத்துக்கொள்கிறோம். 

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை பொறுத்தவரை, அந்த நேரத்தில் அதற்கான மனநிலைக்கு வந்துவிடுவோம். அந்த ஆட்டத்துக்கான திட்டத்தை சரியாக செயல்படுத்த வேண்டும் என்பது தான். களத்தில் நுழைந்துவிட்டால், பதற்றமில்லாமல் இருப்போம். முதன்முறையாக, வெளியே இருந்து தான் ஒரு சில பிரச்னைகள் இருக்கிறது. எனினும், திட்டங்களை சரியாக செயல்படுத்த நினைப்போம்.

பாகிஸ்தான் நல்ல போட்டியாக திகழும் அணி. உலக அளவில் மிகப் பெரிய தொடர். இந்த ஆட்டத்தின் ஒரு அங்கமாக இருப்பது மிகப் பெரிய கௌரவம். இதுவே, அனைவரது சிறப்பையும் வெளிக்கொண்டு வரும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com