17 சிக்ஸர் அடித்து மார்கன் உலக சாதனை: ஆப்கானிஸ்தானுக்கு 398 ரன்கள்  இலக்கு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி மார்கனின் சிக்ஸர் மழையால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 397 ரன்கள் குவித்துள்ளது. 
நன்றி: டிவிட்டர்/உலகக் கோப்பை கிரிக்கெட்
நன்றி: டிவிட்டர்/உலகக் கோப்பை கிரிக்கெட்


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி மார்கனின் சிக்ஸர் மழையால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 397 ரன்கள் குவித்துள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (செவ்வாய்கிழமை) ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. மார்கனின் சிக்ஸர் மழையால் அந்த அணி 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்தது. 

43 ஓவர்கள் பேட்டிங் விவரம்: http://bit.ly/2x4aXaA

57 பந்துகளில் சதமடித்து விளையாடி வந்த மார்கன் தொடர்ந்து சிக்ஸர்களாக பறக்கவிட இங்கிலாந்து அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இதனிடையே, மார்கனுக்கு ஒத்துழைப்பு அளித்து விளையாடி வந்த ஜோ ரூட் 82 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  

இதையடுத்து, அடுத்த பந்திலேயே மார்கன் மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்தார். இது அவருடைய 17-வது சிக்ஸராகும். இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை மார்கன் படைத்தார். எனினும், இவர் சிக்ஸர் அடித்த அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். இவர் 71 பந்துகளில் 4 பவுண்டரி, 17 சிக்ஸர்கள் உட்பட 148 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து, பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். 

ஆனால், மொயீன் அலி கடைசி கட்டத்தில் 1 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடித்து மிரட்ட இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 397 ரன்கள் எடுத்தது. மொயீன் அலி 9 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com