பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இரவில் வெளியே சென்றார்களா?: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளார்கள்...
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இரவில் வெளியே சென்றார்களா?: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம்!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளார்கள்.

ஆட்டம் தொடங்குவதற்குச் சில நேரங்கள் முன்பு பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் தனது மனைவி சானியா மிர்சாவுடன் ஒரு ஷீஷா பாரில் நண்பர்களுடன் இருந்ததாக விடியோவும் செய்தியும் வெளியாகின. சமூகவலைத்தளங்களில் கசிந்த அந்த விடியோ பெரிய சர்ச்சையை உருவாக்கிவிட்டது. பாகிஸ்தான் அமைச்சர் ஷிரீன், சோயிப் மாலிக்கின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார். 

இதையடுத்து அந்த விடியோ குறித்து சோயிப் மாலிக், சானியா மிர்சா ஆகிய இருவரும் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்கள்.

விடியோ குறித்து சோயிப் மாலிக் கூறியதாவது: எப்போதுதான் பாகிஸ்தான் ஊடகம், நம்பகத்தன்மையுடனும் பொறுப்புடனும் நடந்துகொள்ளப் போகின்றன? என் நாட்டுக்காகச் சர்வதேச கிரிக்கெட்டில் 20 வருடங்கள் உழைத்தபோதும் என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நான் விளக்க வேண்டியிருப்பது வேதனைக்குரியது. அந்த விடியோக்கள் 13-ம் தேதி எடுக்கப்பட்டவை. 15-ம் தேதியில் அல்ல என்று கூறியுள்ளார்.

சானியா மிர்சாவும் இதற்கு விளக்கம் அளித்ததோடு, பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்குடன் விவாதத்திலும் ஈடுபட்டார்.

இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் குறித்த இந்தச் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இந்த விவகாரம் குறித்து பிசிபி சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் விதிமுறைகளை மீறவில்லை. சமூகவலைத்தளங்களில் பரவியுள்ள விடியோவும் புகைப்படமும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறுவதற்கு இரு நாள்கள் முன்பு எடுக்கப்பட்டவை. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முந்தைய நாளன்று எல்லா வீரர்களும் அவரவர் ஹோட்டல் அறையில்தான் இருந்தார்கள் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com