உலகக் கோப்பை: வங்கதேச அணிக்கு நெருக்கடி அளிக்கும் ஆப்கானிஸ்தான்!

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இரு சதங்களில் அடித்த ஷகிப், இன்று 51 ரன்களுடன் முஜீப் பந்துவீச்சில்...
உலகக் கோப்பை: வங்கதேச அணிக்கு நெருக்கடி அளிக்கும் ஆப்கானிஸ்தான்!

வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் செளதாம்ப்டனில் இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

புள்ளிகள் பட்டியலில் 6 ஆட்டங்களில் விளையாடி 5 புள்ளிகளுடன் வங்கதேச அணி 6-ம் இடத்திலும் ஆப்கானிஸ்தான் அணி 6 ஆட்டங்களில் விளையாடி ஆறிலும் தோற்று ஒரு புள்ளியும் பெறாமல் கடைசி இடத்திலும் உள்ளன. இதனால் இந்த ஆட்டத்தில் வங்கதேச அணி வெற்றி பெறும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தொடக்க வீரர்களாக தமிம் இக்பாலும் லிட்டன் தாஸும் களமிறங்கினார்கள். ஆனால் இந்த புதிய முயற்சி கைகொடுக்கவில்லை. லிட்டன் தாஸ், 16 ரன்களில் முஜீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 15 ஓவர்களின்போது 1 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் என்கிற கெளரவமான நிலையை அடைந்தது வங்கதேச அணி. இதன்பிறகு அந்த அணியால் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாமல் போனது. 

53 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து தமிம் இக்பால், நபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நேற்று வரை, 6 ஆட்டங்களில் 447 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். 425 ரன்களுடன் 2-ம் இடத்தில் இருந்தார் ஷகிப். இந்நிலையில் இன்று 23 ரன்கள் எடுத்தபோது அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்துக்கு நகர்ந்தார் ஷகிப். 

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இரு சதங்களில் அடித்த ஷகிப், இன்று 51 ரன்களுடன் முஜீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக, செளம்யா சர்கார் 3 ரன்களில் முஜீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 32 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் என்கிற நிலையை அடைந்தது வங்கதேச அணி. இதுபோல அடிக்கடி விக்கெட்டுகள் விழுந்ததால் 25 ஓவர் முதல் அடுத்தப் பத்து ஓவர்களுக்கு மேல் ஒரு பவுண்டரியும் அடிக்க முடியாமல் தடுமாறினார்கள் வங்கதேச பேட்ஸ்மேன்கள். 

வங்கதேச  அணி 36 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. முஷ்ஃபிகுர் ரஹிம் 44, மஹ்முதுல்லா 6 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com