சுடச்சுட

  

  உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் மூன்று அதிரடி மாற்றங்கள்!

  By எழில்  |   Published on : 20th May 2019 01:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Mohammad_Amir12

   

  வரும் 30-ஆம் தேதி தொடங்கவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 10 அணிகள் இடம் பெற்றுள்ளன.

  ஒரு மாதத்துக்கு முன்பு உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

  முதலில் அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பெறாத முஹமது ஆமிர், வஹாப் ரியாஸ், ஆசிஃப் அலி ஆகியோர் தற்போது அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஜுனைத் கான், ஃபஹீம் அஷ்ரஃப், அபித் அலி ஆகியோர் முதலில் அறிவிக்கப்பட்ட அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். வஹாப் ரியாஸ், 2017 ஜூன் மாதம் கடைசியாக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடினார். இந்நிலையில் தற்போது உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

  பாகிஸ்தான் அணி: சர்ஃபராஸ் அஹமது (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஃபகார் ஸமான், இமாம் உல் அஹ், பாபர் அஸாம், ஹாரிஸ் சொஹைல், ஆசிஃப் அலி, சோயிப் மாலிக், முகமது ஹபீஸ், இமாத் வாசிம், சதாப் கான், ஹசன் அலி, ஷஹீன் அஃப்ரிடி, முகமது ஆமீர், வஹாப் ரியாஸ், முகமது ஹஸ்நைன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai