சுடச்சுட

  

  நல்லவேளை ஐபிஎல்-லில் இது நடந்துள்ளது: குல்தீப் யாதவ் குறித்து விராட் கோலி

  By எழில்  |   Published on : 21st May 2019 05:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  PTI5_21_2019_000089B

   

  கிரிக்கெட் உலகின் பெரிய போட்டியாக உள்ளது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையாகும். கடந்த 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

  உலகக் கோப்பைப் போட்டிக்காக இங்கிலாந்துக்குப் புறப்படும் முன்பு செய்தியாளர்களிடம் கேப்டன் விராட் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பேசினார்கள். இந்திய அணிக்கான வாய்ப்பு குறித்து விராட் கோலி பேசியதாவது:

  நல்லவிதமான கிரிக்கெட் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு. அதில் தான் எங்கள் கவனம் உள்ளது. கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் இதற்கான பலன் கிடைத்துள்ளது. நம்பிக்கையுடன் உலகக் கோப்பைப் போட்டியில் களமிறங்கவுள்ளோம். 

  இங்கிலாந்து நாட்டின் சூழலை விடவும் அழுத்தமான தருணங்களைச் சரியாக எதிர்கொள்வதே முக்கியமானது. இந்தப் போட்டிக்காக நம் பந்துவீச்சாளர்கள் சரியான முறையில் தயாராகியுள்ளார்கள். ஐபிஎல் போட்டியின்போதே நம் பந்துவீச்சாளர்கள் யாரும் சோர்வுடன் காணப்படவில்லை. இதுகுறித்து அவர்களுக்கு முன்பே அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

  குல்தீப் யாதவின் மோசமான ஃபார்ம் ஐபிஎல்-லில் தான் நிகழ்ந்துள்ளது. நல்லவேளையாக உலகக் கோப்பைப் போட்டியில் அல்ல. ஜாதவும் நல்ல ஆடுகளங்களில் விளையாடவில்லை. 

  எல்லா அணிகளும் கிட்டத்தட்ட சம அளவிலான திறமைகளைக் கொண்டுள்ளன. 2015-ல் ஆப்கானிஸ்தான் நன்றாக விளையாடியது என்று கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai