சுடச்சுட

  

  இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் முடிந்த பிறகு வீரர்களுடன் குடும்பத்தினரும் தங்கலாம்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய அனுமதி!

  By எழில்  |   Published on : 25th May 2019 02:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Mohammad_Amir12

   

  ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2019 ஒருநாள் உலகக் கோப்பை, வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

  உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் வீரர்கள், தங்களுடைய மனைவிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அழைத்து வரக்கூடாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கட்டளையிட்டுள்ளது.

  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகளின்படி, வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களில் வீரர்களுடன் இணைந்து மனைவிகளும் குடும்ப உறுப்பினர்களும் வரக்கூடாது. அப்படியே வந்தாலும் அவர்களுடைய சொந்தச் செலவில் தான் வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வீரர்களுடன் இணைந்து நட்சத்திர விடுதியில் அவர்கள் தங்கக்கூடாது என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது. 

  எனினும் பாகிஸ்தான் வீரர்களில் ஹாரிஸ் சொஹைல், ஆசிஃப் அலி ஆகியோருக்கு மட்டும் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகளில் குடும்ப உறுப்பினர்களுடன் வீரர்கள் இருக்கும்போது அவர்களுடைய கவனம் திசைதிரும்பும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது பாகிஸ்தான் வீரர்களுடன் குடும்ப உறுப்பினர்களும் தங்கிக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் புதிய விதிமுறைகளின்படி தற்போது அதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

  இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது முடிவில் மாற்றத்தைக் கொண்டுள்ளது. ஜூன் 16-ல் இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் முடிந்தபிறகு வீரர்களுடன் இணைந்து மனைவிகளும் குடும்ப உறுப்பினர்களும் நட்சத்திர விடுதிகளில் தங்கலாம் என்று புதிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  பாகிஸ்தான் அணி மே 31 அன்று மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகத் தனது முதல் ஆட்டத்தை விளையாடவுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai