இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டி: வார்னர், ஸ்மித்துக்கு எதிராக ரசிகர்கள் கூச்சல்

இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிராக இங்கிலாந்து ரசிகர்கள் கூச்சலிட்டனர்.
நன்றி: டிவிட்டர்/உலகக் கோப்பை கிரிக்கெட்
நன்றி: டிவிட்டர்/உலகக் கோப்பை கிரிக்கெட்


இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிராக இங்கிலாந்து ரசிகர்கள் கூச்சலிட்டனர்.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கான பயிற்சி ஆட்டங்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இன்றைய பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா, இந்தியா - நியூஸிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன. 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டம் சௌதாம்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். டேவிட் வார்னர் களமிறங்கியபோது அவருக்கு எதிராக இங்கிலாந்து ரசிகர்கள் கூச்சலிட்டனர். 

இதையடுத்து, அந்த அணி 83 எடுத்திருந்தபோது டேவிட் வார்னர் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினார். அப்போதும், மைதானத்தில் வார்னர் மற்றும் ஸ்மித்துக்கு எதிரான கூச்சல்கள் கூடுதலாக ஒலித்தது. 

எனினும், இந்த போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து அசத்தினார். முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் 102 பந்துகளில் 116 ரன்கள் எடுத்தார். 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அதிகாரப்பூர்வமற்ற பயிற்சி போட்டி நடைபெற்றது. ஆனால், அப்போது மைதானத்தில் ரசிகர்கள் பெரிதளவு இல்லை. 

ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை தொடர், அதைத்தொடர்ந்து ஆஷஸ் டெஸ்ட் தொடர் என தொடர்ச்சியாக 4 மாதங்களுக்கு மேலாக இங்கிலாந்திலேயே இருக்க வேண்டியுள்ளது. அப்படி இருக்கையில், முதல் போட்டியிலேயே அவர்களுக்கு எதிராக இப்படி கூச்சல்கள் கிளம்புவது ஆஸ்திரேலிய அணிக்கு சற்று பின்னடைவாக உள்ளது. 

முன்னதாக, கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்தது. அந்த தடைக்காலம் கடந்த மார்ச் 29-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com