பாகிஸ்தான், வங்கதேசம் இடையிலான பயிற்சி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது

பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.
பாகிஸ்தான், வங்கதேசம் இடையிலான பயிற்சி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது


பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.  

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. 6-வது பயிற்சி ஆட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதவிருந்தன. ஆனால், மழை காரணமாக அந்த ஆட்டம் டாஸ் போடாமலேயே கைவிடப்பட்டது. 

பாகிஸ்தான் தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஏற்கெனவே உலகக் கோப்பை தொடருக்கு முன் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் பாகிஸ்தான் அணி இழந்தது. 

அதனால், பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பை லீக் சுற்றை உத்வேகத்துடன் எதிர்நோக்க காத்திருந்த பாகிஸ்தான் அணிக்கு இது பின்னடைவாக அமைந்துள்ளது. வங்கதேச அணிக்கு இது முதல் பயிற்சி ஆட்டமாகும். அந்த அணி தனது இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் வரும் 28-ஆம் தேதி இந்தியாவை எதிர்கொள்கிறது. 

இதேபோல், 5-வது பயிற்சி ஆட்டமும் இன்று நடைபெறுகிறது. அதில் தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் களமிறங்கியது. 

9-வது ஓவரின் இடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மழை விட்ட பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால், ஆட்டம் தொடங்கிய 7 நிமிடங்களில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 

இதையடுத்து, இந்த ஆட்டம் 31 ஓவராக குறைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com