உலகக் கோப்பையில் வெளியேறும் முன்னாள் சாம்பியன்கள்! மீதமுள்ள சாம்பியன்களின் நிலைமை?

ரஷியக் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை பல அதிர்ச்சிகள் நிகழ்ந்துள்ளன... 
உலகக் கோப்பையில் வெளியேறும் முன்னாள் சாம்பியன்கள்! மீதமுள்ள சாம்பியன்களின் நிலைமை?

ரஷியாவில் நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை பல அதிர்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. முதல் அதிர்ச்சி, நடப்பு சாம்பியனான ஜெர்மனி, முதல் சுற்றுடன் வெளியேறியது. 

அடுத்ததாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆர்ஜென்டீனா, ஸ்பெயின் ஆகிய முன்னாள் உலக சாம்பியன்கள் வெளியேறியுள்ளன. எனினும் 1998 சாம்பியன் பிரான்ஸ், இருமுறை சாம்பியனான உருகுவே ஆகிய அணிகள் முதல் நாக் அவுட்டில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. 

இந்நிலையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரேஸில், இங்கிலாந்து ஆகிய இரு முன்னாள் உலக சாம்பியன்கள் மட்டுமே மீதமுள்ளன. 

இன்று இந்திய நேரம் 7.30 மணிக்கு பிரேஸிலும் மெக்ஸிகோவும் மோதவுள்ளன. நாளை இரவு 11.30 மணிக்கு இங்கிலாந்தும் கொலம்பியாவும் மோதவுள்ளன. இதில் பிரேஸிலும் இங்கிலாந்தும் வெற்றி பெற்றால் காலிறுதிக்கு நான்கு முன்னாள் சாம்பியன்கள் தகுதி பெற்றுவிடும். 

வெளியேறியுள்ள உலக சாம்பியன்கள்

ஜெர்மனி 1954, 1974, 1990, 2014
ஆர்ஜென்டீனா 1978, 1986
ஸ்பெயின் 2010

களத்தில் உள்ள உலக சாம்பியன்கள் (ஜூலை 1 வரை)

பிரேஸில் 1958, 1962, 1970, 1994, 2002
உருகுவே 1930, 1950
இங்கிலாந்து 1966
பிரான்ஸ் 1998

(4 முறை உலக சாம்பியனாக இருந்த இத்தாலி அணி ரஷியப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com