ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரைப் புதிதாகத் தேர்வு செய்துள்ள சிஎஸ்கே அணி

2019-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரைப் புதிதாகத் தேர்வு செய்துள்ள சிஎஸ்கே அணி

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரென்டார்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த பிரபல வீரர் ஹேசில்வுட் விலகினார். கடந்த ஜூலை மாதம் முதல் வெவ்வேறு காலக்கட்டத்தில் கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்துள்ளேன். எனவே தற்போது ஓய்வு எடுக்க முடிவெடுத்து ஆஸ்திரேலியாவிலும் வீட்டிலும் இருக்கவுள்ளேன் என்று தனது விலகலுக்கான காரணத்தை ஹேசில்வுட் கூறினார். கடந்த வருட ஐபிஎல் போட்டியில் ஹேசில்வுட் மூன்று ஆட்டங்களில் விளையாடினார். 

இந்நிலையில் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரென்டார்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான 30 வயது  ஜேசன் பெஹ்ரென்டார்ப், ஆஸ்திரேலிய அணிக்காக 11 ஒருநாள், 7 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் 2019-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com