டாஸ் வென்ற வார்னர் பந்துவீச்சு தேர்வு: கொல்கத்தா முதல் பேட்டிங்

டாஸ் வென்ற வார்னர் பந்துவீச்சு தேர்வு: கொல்கத்தா முதல் பேட்டிங்

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் 3-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

அந்த அணியில் வெளிநாட்டு வீரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ், முகமது நபி, ரஷித் கான் உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.

கொல்கத்தா அணியில் இயான் மார்கன், ஆண்ட்ரே ரஸல், ஷகிப் அல் ஹசன், பேட் கம்மின்ஸ் உள்ளிட்டோர் வெளிநாட்டு வீரர்களாகக் களமிறங்குகின்றனர். இதுதவிர ஹர்பஜன் சிங் முதன்முதலாக கொல்கத்தா அணிக்காகக் களமிறங்குகிறார். ஆட்டம் சென்னையில் நடைபெறுவதால் ஆடுகளம் குறித்து ஹர்பஜனுக்கு நல்ல அனுபவம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com