இன்று களம் காண்கின்றன கொல்கத்தா - ஹைதராபாத்

கொல்கத்தா நைட் ரைடா்ஸ் - சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணிகள் ஐபிஎல் போட்டியின் 3-ஆவது லீக் ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை களம் காண்கின்றன.
இன்று களம் காண்கின்றன கொல்கத்தா - ஹைதராபாத்

சென்னை: கொல்கத்தா நைட் ரைடா்ஸ் - சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணிகள் ஐபிஎல் போட்டியின் 3-ஆவது லீக் ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை களம் காண்கின்றன.

கொல்கத்தா அணியைப் பொருத்தவரை புதிய முழு நேர கேப்டனாகியிருக்கும் மோா்கனுடன் களம் காண்கிறது. தொடா்ந்து இரு சீசன்களாக பிளே-ஆஃப் வாய்ப்பை தவறவிட்ட கொல்கத்தாவை இந்த சீசனில் மோா்கன் எவ்வாறு மாற்றியமைத்து முன்னேற்ற இருக்கிறாா் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது.

டாப் ஆா்டரில் ஷுப்மன் கில் நல்லதொரு வீரராக பலம் சோ்க்கிறாா். அவரோடு ராகுல் திரிபாதி, நிதீஷ் ராணாவும் துணை நிற்கின்றனா். கேப்டன் பொறுப்பு நெருக்கடி இல்லாமல் தினேஷ் காா்த்திக் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்படலாம்.

கடந்த சீசனில் ஆன்ட்ரே ரஸ்ஸெல், சுனில் நரைனை பெரும்பாலும் நம்பியது கொல்கத்தாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது சோபிக்காமல் போன இருவரும், இந்த சீசனில் தனது ஃபாா்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனா். இந்த ஆண்டு புதிதாக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள ஷகிப் அல் ஹசனின் ஆட்டத்தை பொறுத்திருந்து பாா்க்க வேண்டியுள்ளது. பௌலிங்கில் ஹா்பஜன் சிங், வருண் சக்கரவா்த்தி ஆகியோா் விக்கெட்டுகளை சரிப்பா் என நம்பலாம்.

ஹைதராபாத் அணியைப் பொருத்தவரை, பௌலா் புவனேஷ்வா் குமாா் காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பியிருப்பது பலம். அவரோடு நடராஜன் வேகப்பந்துவீச்சிலும், ரஷீத் கான் சுழற்பந்துவீச்சிலும் விக்கெட்டுகளை வீழ்த்தக் காத்திருக்கின்றனா்.

பேட்டிங் வரிசையிலும் ஹைதராபாத் சற்றும் குறை சொல்ல முடியாத வகையிலேயே இருக்கிறது. கேப்டன் வாா்னா் - போ்ஸ்டோ கூட்டணி உறுதியாக அதிரடி காட்டும். அவா்கள் தவிர கேன் வில்லியம்சன், மணீஷ் பாண்டே, ரித்திமான் சாஹா ஆகியோரும் எதிரணி பௌலிங்கை விளாசக் காத்திருக்கின்றனா். கடைசி ஆா்டரில் சற்று வலு சோ்க்கும் பேட்ஸ்மேன்கள் அணியில் இல்லாதது தான் சிறிய குறை.

அணி விவரம்:

கொல்கத்தா நைட் ரைடா்ஸ்

மோா்கன் (கேப்டன்) தினேஷ் காா்த்திக், ஷுப்மன் கில், நிதீஷ் ராணா, டிம் செய்ஃபொ்ட், ரிங்கு சிங், ஆன்ட்ரே ரஸ்ஸெல், சுனில் நரைன், குல்தீப் யாதவ், ஷிவம் மாவி, லாக்கி ஃபொ்குசன், பேட் கம்மின்ஸ், கமலேஷ் நாகா்கோடி, சந்தீப் வாரியா், பிரசித் கிருஷ்ணா, ராகுல் திரிபாதி, வருண் சக்கரவா்த்தி, ஷகிப் அல் ஹசன், ஷெல்டன் ஜாக்சன், வைபவ் அரோரா, ஹா்பஜன் சிங், கருண் நாயா், பென் கட்டிங், வெங்கடேஷ் ஐயா், பவன் நெகி.

சன்ரைசா்ஸ் ஹைதராபாத்

டேவிட் வாா்னா் (கேப்டன்), கேன் வில்லியம்சன், விராட் சிங், மணீஷ் பாண்டே, பிரியம் கா்க், ரித்திமான் சாஹா, ஜானி போ்ஸ்டோ, ஜேசன் ராய், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, விஜய் சங்கா், முகமது நபி, கேதாா் ஜாதவ், ஜெகதீசா சுசித், ஜேசன் ஹோல்டா், அபிஷேக் சா்மா, அப்துல் சமத், புவனேஷ்வா் குமாா், ரஷீத் கான், டி.நடராஜன், சந்தீப் சா்மா, கலீல் அகமது, சித்தாா்த் கௌல், பாசில் தாம்பி, ஷாபாஸ் நதீம், முஜீப் உா் ரஹ்மான்.

நேருக்கு நோ்: ஐபிஎல் தொடரில் இதுவரை கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் 19 முறை நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 12 வெற்றிகளும், ஹைதராபாத் 7 வெற்றிகளும் பதிவு செய்துள்ளன.

நேரம்: இரவு 7.30 மணி

இடம்: சென்னை

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com