சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 120 ரன்களுக்கு ஆட்டமிழந்த பஞ்சாப் கிங்ஸ்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் இன்று விளையாடிய விதம் அதன் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்திருக்கும். 
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 120 ரன்களுக்கு ஆட்டமிழந்த பஞ்சாப் கிங்ஸ்!

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 120 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

சென்னையில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் மூன்று மாற்றங்கள். ஃபெபியன் ஆலன், மோசஸ் ஹென்ரிகஸ், எம். அஸ்வின் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். சன்ரைசர்ஸ் அணியில் கேன் வில்லியம்சன், கெதர் ஜாதவ் இடம்பெற்றுள்ளார்கள். சிஎஸ்கே அணியில் விளையாடி வந்த கெதர் ஜாதவ், முதல்முறையாக சன்ரைசர்ஸ் அணியில் விளையாடுகிறார். மணிஷ் பாண்டேவுக்குப் பதிலாக சித்தார்த் கெளல் இடம்பெற்றுள்ளார்.  

சென்னை ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமானது என்பதால் பஞ்சாப் அணி மிகவும் தடுமாறியது. கே.எல். ராகுல் 4 ரன்களில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 22 ரன்கள் எடுத்த மயங்க் அகர்வால், கலீல் அஹமது பந்துவீச்சில் ஆட்டமிழக்க, வந்த வேகத்தில் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார் நிகோலஸ் பூரன். நிதானமாக விளையாடிய கெயில், 17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ரஷித் கான் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். 

தடுமாற்றத்துடன் விளையாடிய பஞ்சாப் அணி, 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்தது. 10 ஓவர்களுக்குப் பிறகும் நிலைமை மாறவில்லை. தீபக் ஹூடா 13 ரன்களில் அபிஷேக் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பிறகு ஹென்ரிகஸை 14 ரன்களில் வெளியேற்றினார் அபிஷேக் சர்மா. ஃபேபியன் ஆலன் 6 ரன்களில் கலீல் அஹமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கான், கடைசி ஓவர்களில் பஞ்சாப் அணிக்கு ஓரளவு ரன்கள் சேர்த்தார். எனினும் அவரும் 2 சிக்ஸர்கள் அடித்துவிட்டு 19-வது ஓவரில் கலீல் அஹமது பந்துவீச்சில் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் முருகன் அஸ்வின் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷமி 3 ரன்களில் ரன் அவுட் ஆனார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் இன்று விளையாடிய விதம் அதன் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்திருக்கும். 

பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் எடுத்துள்ளது. கலீல் அஹமது 3 விக்கெட்டுகளையும் அபிஷேக் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com