ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: பெங்களூரை 3-ம் இடத்துக்குத் தள்ளிய சென்னை, தில்லி அணிகள்!

பெங்களூருக்கு இது முதல் தோல்வியாகும். சென்னைக்கு இது 4-வது தொடா் வெற்றி.
ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: பெங்களூரை 3-ம் இடத்துக்குத் தள்ளிய சென்னை, தில்லி அணிகள்!

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரு ஐபிஎல் ஆட்டங்களில் சென்னையும் தில்லியும் வென்றன. இதனால் அந்த இரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன. 

ஐபிஎல் போட்டியின் 19-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 69 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வீழ்த்தியது. இந்த வருடம் வெற்றி நடை போட்டுவந்த பெங்களூருக்கு இது முதல் தோல்வியாகும். சென்னைக்கு இது 4-வது தொடா் வெற்றி.

மும்பையில் நேற்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடிய பெங்களூா் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களையே எட்டியது.

சென்னை வீரா் ஜடேஜா, பேட்டிங்கில் ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் சிக்ஸா்களாக விளாசி அணியின் ஸ்கோரை அதிரடியாக உயா்த்தினார். 4 சிக்ஸர்களுடன் அந்த ஓவரில் சென்னை அணிக்கு 37 ரன்களைப் பெற்றுத் தந்தார். பந்துவீச்சிலும் மேஸ்க்வெல், டி வில்லியா்ஸ் உள்பட 3 விக்கெட்டுகளை சரித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தாா். அவரே ஆட்டநாயகன் ஆனாா்.

சன்ரைசா்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் சூப்பா் ஓவா் முறையில் வெற்றி பெற்றது.

டெல்லிக்கு இது 4-வது வெற்றி; ஹைதராபாத்துக்கு இது 4-வது தோல்வி.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தில்லி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் அதே ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் அடித்தது. ஆட்டம் சமன் ஆனதால் வெற்றியாளரைத் தீா்மானிக்க சூப்பா் ஓவா் முறை கையாளப்பட்டது. அதில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய டெல்லி 8 ரன்கள் எடுத்து வென்றது.

நேற்று வெற்றி பெற்ற சென்னையும் தில்லியும் தலா 8 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன. இதனால் பெங்களூர் அணி 3-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது. 

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. சென்னை 5 4 1 8 +1.612
 2. தில்லி 5 4 1 8 +0.334
 3. பெங்களூர் 5 4 1 8 +0.096
 4. மும்பை 5 2 3 4 -0.032
 5. பஞ்சாப்  5 2 3 4 -0.428
 6. ராஜஸ்தான்  5 2 3 4 -0.681
 7. ஹைதராபாத்  5 1 4 2 -0.180
 8. கொல்கத்தா 5 1 4 2 -0.675

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com