சுழற்பந்து வீச்சாளர் சஹாலின் இடத்துக்கு ஆபத்தா?: ஆர்சிபி பயிற்சியாளர் பதில்

சுழற்பந்து வீச்சாளர் சஹாலின் இடத்துக்கு ஆபத்தில்லை என ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் சைமன் கடிச் கூறியுள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர் சஹாலின் இடத்துக்கு ஆபத்தா?: ஆர்சிபி பயிற்சியாளர் பதில்

சுழற்பந்து வீச்சாளர் சஹாலின் இடத்துக்கு ஆபத்தில்லை என ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் சைமன் கடிச் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 26-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வருடம் 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 3-வது வெற்றியைப் பெற்றுள்ளது.

ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ராகுல் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பிறகு விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர் ஹர்ப்ரீத் பிரார் - கோலி, மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருது அவருக்கே வழங்கப்பட்டது.

இந்த வெற்றியினால் பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்த ஆட்டத்தில் ஆர்சிபி சுழற்பந்து வீச்சாளர் சஹால் 4 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இதையடுத்து ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் சைமன் கடிச் கூறியதாவது:

சஹாலின் இடம் பரிசீலனையில் உள்ளது எனக் கூறமாட்டேன். எங்களை விடவும் பஞ்சாப் அணியினர் நன்கு பந்துவீசினார்கள். ஆட்டம் செல்ல செல்ல ஆடுகளம் மெதுவான தன்மையை அடைந்தது. நிதானமான ஆரம்பத்துக்குப் பிறகு சஹால் நன்கு பந்துவீசினார். எனினும் முதல் ஓவரில் நிறைய ரன்களைக் கொடுத்த பிறகு அடுத்த ஓவர்களில் உடனடியாக நன்றாகப் பந்துவீசி விட முடியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com