ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர் விளையாடுவாரா?

நான்கு பேரில் யாரை நீக்கம் செய்வார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது...
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர் விளையாடுவாரா?

சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையால் ராஜஸ்தானுக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் டேவிட் வார்னர் விளையாடுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

சமீபத்தில் சிஎஸ்கேவிடம் தோல்வியடைந்தது டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி. கடந்த ஆறு ஆட்டங்களில் ஐந்தில் தோல்வியடைந்துள்ளது. இதனால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெளிநாட்டு வீரர்களில் மாற்றம் ஏற்படும். வரும் ஆட்டங்களில் ஆடுகளத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அணியின் வெற்றிகளுக்கு டேவிட் வார்னர் நிச்சயம் உதவுவார் என்று சன்ரைசர்ஸ் அணியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், பேர்ஸ்டோவ், ரஷித் கான் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் தான் சன்ரைசர்ஸ் அணியில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார்கள். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெளிநாட்டு வீரர்களில் மாற்றம் ஏற்படும் என சன்ரைசர்ஸ் கூடுதலாக ஒரு தகவல் தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு பேரில் கேப்டனான கேன் வில்லியம்சன் அணியில் நிச்சயம் இடம்பெறுவார். அதேபோல ரஷித் கானும் அணியில் விளையாடுவார். பேர்ஸ்டோவ் தான் ஹைதராபாத் அணியில் அதிக ரன்கள் எடுத்த வீரர். 6 ஆட்டங்களில் 2 அரை சதங்களுடன் 218 ரன்கள். டேவிட் வார்னர் 2 அரை சதங்களுடன் 193 ரன்கள் எடுத்துள்ளார். 

இந்நிலையில் வெளிநாட்டு வீரர்களில் மாற்றம் ஏற்படும் என்றால் இந்த நான்கு பேரில் யாரை நீக்கம் செய்வார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. சென்னைக்கு எதிராக நிதானமாக விளையாடியதால் டேவிட் வார்னர் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறதா என்கிற மற்றொரு கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் நாளைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணியிம் இடம்பெறும் நான்கு வெளிநாட்டு வீரர்கள் யார் யார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com