அக்‌ஷய் குமார் போல பணத்துக்காக டர்பன் அணிய மாட்டோம்: பஞ்சாப் அணியின் ஹர்ப்ரீத் பிரார்

அக்‌ஷய் குமார் போல பணத்துக்காக டர்பன் அணிய மாட்டோம் என பஞ்சாப் அணியைச் சேர்ந்த ஹர்ப்ரீத் பிரார் கூறியுள்ளார்.
அக்‌ஷய் குமார் போல பணத்துக்காக டர்பன் அணிய மாட்டோம்: பஞ்சாப் அணியின் ஹர்ப்ரீத் பிரார்

அக்‌ஷய் குமார் போல பணத்துக்காக டர்பன் அணிய மாட்டோம் என பஞ்சாப் அணியைச் சேர்ந்த ஹர்ப்ரீத் பிரார் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 26-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வருடம் 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 3-வது வெற்றியைப் பெற்றுள்ளது.

ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ராகுல் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பிறகு விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர் ஹர்ப்ரீத் பிரார் - கோலி, மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பேட்டிங்கில் 17 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். இதனால் ஆட்ட நாயகன் விருது அவருக்கே வழங்கப்பட்டது. இந்த வெற்றியினால் பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் ஒருவாரத்துக்கு முன்பு இன்ஸ்டகிராமில் பிராரின் புகைப்படத்துக்கு ரசிகர் ஒருவர், சிங் ஈஸ் பிளிங் படத்தில் வருகிற அக்‌ஷய் குமார் போல இருக்கிறீர்கள் என்று கூறினார். இதற்குப் பதில் அளித்த பிரார், நாங்கள் பணத்துக்காக டர்பன் அணிய மாட்டோம் என்றார். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com