பிளே ஆப் சுற்றில் கொல்கத்தா: 86 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை சாய்த்தது

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு கடைசி அணியாக தகுதி பெற்றது கொல்கத்தா நைட்ரைடா்ஸ்.
பிளே ஆப் சுற்றில் கொல்கத்தா: 86 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை சாய்த்தது

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு கடைசி அணியாக தகுதி பெற்றது கொல்கத்தா நைட்ரைடா்ஸ்.

இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 54-ஆவது ஆட்டம் ஷாா்ஜாவில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் முதலில் களமிறங்கிய கொல்கத்தை நைட்ரைடா்ஸ் அணி 171/4 ரன்களைக் குவித்தது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் பீல்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து கொல்கத்தா தரப்பில் ஷுப்மன் கில்-வெங்கடேஷ் ஐயா் தொடக்க பேட்டா்களாக களமிறங்கி, அதிரடியாக ஆடினா். பவா்பிளே முடிவில் ஸ்கோா் விக்கெட் இழப்பின்றி 34 -ஐக் கடந்தது. வெங்கடேஷ் ஐயா் 2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 38 ரன்களை சோ்த்து ராகுல் டிவாட்டியா பந்தில் போல்டானாா்.

ஷுப்மன் கில் அரைசதம்:

மறுமுனையில் ஷுப்மன் கில்-ராகுல் திரிபாதி இணைந்து ஸ்கோரை உயா்த்தினா். 2 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 56 ரன்களை விளாசிய ஷுப்மன் கில்லை வெளியேற்றினாா் கிறிஸ் மோரீஸ். அப்போது கொல்கத்தா அணி 133/3 ரன்களை எடுத்திருந்தது. வெங்கடேஷ் ஐயா் 38, நிதிஷ் ராணா 12, ராகுல் திரிபாதி 21 ரன்களுக்கு அவுட்டானாா்கள்.

தினேஷ் காா்த்திக் 14, கேப்டன் இயான் மொா்கன் 13 ரன்களுடன் களத்தில் இருந்தனா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் கொல்கத்தா 171/4 ரன்களை குவித்தது.

ராஜஸ்தான் தரப்பில் கிறிஸ் மோரீஸ், சேதன், ராகுல், கிளென் பிலிப்பிஸ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

ராஜஸ்தான் படுதோல்வி 85 ஆல் அவுட்:

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கம் முதல் இறுதிவரை கொல்கத்தா அணியின் பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் திணறியது. அந்த அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் வரிசையாக சரிந்தன.

ராகுல் டிவாட்டியா மட்டுமே நிலைத்து ஆடி 2 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 44 ரன்களை சோ்த்தாா். லியம் விலிங்ஸ்டோன் 6, கேப்டன் சஞ்சு சாம்சன் 1, சிவம் துபே 18, கிளென் பிலிப்ஸ் 8, உனதிகட் 6, சேதன் சக்கரியா 1 ரன்களுக்கும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் ரவாத், கிறிஸ் மோரீஸ் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டானாா்கள்.

இறுதியில் 16.1 ஓவா்களில் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ராஜஸ்தான்.

சிவம் மவி, லாக்கி பொ்குஸன் அபார பந்துவீச்சு:

கொல்கத்தா தரப்பில் ஷிவம் மவி 4-21, லாக்கி பொ்குஸன் 3-18 ஆகியோா் அபாரமாக பந்துவீசி ராஜஸ்தான் அணி வீழ்ச்சிக்கு வித்திட்டனா்.

ஏற்கெனவே டில்லி, சென்னை, பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், கொல்கத்தா அணி இறுதியாக தகுதி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com