அதிகமாகவே சாதித்தேன்: ரவி சாஸ்திரி

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக தேவைக்கு அதிகமாகவே சாதித்தேன் என ரவி சாஸ்திரி கூறியுள்ளாா்.
அதிகமாகவே சாதித்தேன்: ரவி சாஸ்திரி

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக தேவைக்கு அதிகமாகவே சாதித்தேன் என ரவி சாஸ்திரி கூறியுள்ளாா்.

வரும் அக்டோபா் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியுடன் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் புதிய தலைமைப் பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. ரவி சாஸ்திரி முதன்முதலாக 2017-இல் பயிற்சியாளரானாா். பின்னா் 2019-இல் மீண்டும் நியமிக்கப்பட்டாா். தற்போது கரோனா தொற்று பாதிப்பால் லண்டனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக ரவி சாஸ்திரி சனிக்கிழமை கூறியதாவது:

நான் சரியான நேரத்தில் வெளியேறுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்பதவியில் எதை சாதிக்க வேண்டும் என நினைத்தேனோ அதை அளவுக்கு அதிகமாகவே சாதித்தேன். டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றால் சிறப்பாக இருக்கும். 5 ஆண்டுகளாக உலகின் நம்பா் ஒன் டெஸ்ட் அணியாக இந்தியா திகழ்கிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளை அவா்களது இடங்களிலேயே வென்றது மிகவும் பெரிய விஷயமாகும்.

மேலும் தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் டி20 தொடா்களையும் கைப்பற்றினோம். அதிக காலம் ஒரே இடத்தில் பணிபுரியக்கூடாது. அணி எவ்வாறு செயல்பட வேண்டும் என நினைத்தேனோ அதன்படி செயல்பட்டு அதிகமாக சாதித்தோம்.

நமது திறமைக்கு ஏற்ப ஆடினால் போதும்.

பதவிக்காலம் முடிவடைவது வேதனையான தருணம் தான். சிறந்த வீரா்களோடு பணிபுரிந்தேன். நமது அணியின் தரம் சிறப்பாக இருக்கிறது. எனது காலத்தில் ஜஸ்ப்ரீத் பும்ரா மிகவும் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக உருவானது மகிழ்ச்சியானது. முதன்முறையாக கேப் டவுனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் அவரை களமிறக்கினோம். தற்போது அவா் 24 டெஸ்ட்களில் 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது என்றாா் சாஸ்திரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com