
நவி மும்பையில் சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் அணிகளுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. சன்ரைசர்ஸ் அணியில் மார்கோ யான்சென், ஷஷாங் சிங் ஆகியோர் அறிமுகமாகியுள்ளார்கள். தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர், நடராஜன் இடம்பெற்றுள்ளார்கள். சிஎஸ்கே அணியில் பிரிடோரியஸுக்குப் பதிலாக இலங்கைச் சுழற்பந்துவீச்சாளர் மகீஷ் தீக்ஷனா அறிமுகமாகியுள்ளார். முகேஷ் செளத்ரி அணியில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளார்.
சிஎஸ்கே இதுவரை மூன்று ஆட்டங்களிலும் சன்ரைசர்ஸ் இதுவரை இரு ஆட்டங்களிலும் விளையாடியுள்ளன. இரண்டு அணிகளும் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.