சிக்ஸர் மழை: ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே நிகழ்த்திய சாதனைகள்

உத்தப்பாவும் டுபேவும் 3-வது விக்கெட்டுக்கு 74 பந்துகளில் 165 ரன்கள் எடுத்தார்கள்.
சிக்ஸர் மழை: ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே நிகழ்த்திய சாதனைகள்

ஆர்சிபி அணியைத் தோற்கடித்து முதல் வெற்றியைப் பெற்ற சிஎஸ்கே அணி, அதிக ரன்கள் குவித்து சில சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளது.

ஐபிஎல் போட்டியில் முதல் நான்கு ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் தோல்வியடைந்தது சிஎஸ்கே. நேற்று ஆர்சிபிக்கு அணிக்கு எதிராக 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

நவி மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. உத்தப்பா 88, ஷிவம் டுபே ஆட்டமிழக்காமல் 95 ரன்கள் எடுத்தார்கள். பிறகு விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டியில் முதல் வெற்றியை அடைந்தது சிஎஸ்கே. மஹீஷ் தீக்‌ஷனா 4 விக்கெட்டுகளும் ஜடேஜா 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 2 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 9-ம் இடத்தில் உள்ளது சிஎஸ்கே.

இந்த ஆட்டத்தின்மூலம் சிஎஸ்கே அணி நிகழ்த்திய சாதனைகள்:

* கடைசி 10 ஓவர்களில் 156 ரன்கள் குவித்தது சிஎஸ்கே அணி. கடைசி 10 ஓவர்களில் சிஎஸ்கே எடுத்த அதிகபட்ச ரன்கள் இதுதான். ஐபிஎல் போட்டியில் இதற்கு 3-ம் இடம்.

கடைசி 10 ஓவர்களில் அதிக ரன்கள்:

ஆர்சிபி vs குஜராத், 2016 - 172 ரன்கள்
பஞ்சாப் vs சிஎஸ்கே, 2014 - 162 ரன்கள்
சிஎஸ்கே vs ஆர்சிபி, 2022 - 156 ரன்கள்
சிஎஸ்கே vs ராஜஸ்தான், 2010 - 155 ரன்கள்
சிஎஸ்கே vs பஞ்சாப், 2008 - 152 ரன்கள்

* ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக ஓர் அணி (சிஎஸ்கே), கடைசி 10 ஓவரின் அனைத்து ஓவர்களிலும் குறைந்தது 10 ரன்கள் எடுத்துள்ளது.

11-20 ஓவர்கள் - 13, 13, 19, 13, 15, 12, 18, 24, 14, 15. 

* இந்த ஆட்டத்தில் சிக்ஸர்கள்

உத்தப்பா - 9
டுபே - 8
ஆர்சிபி - 7

* உத்தப்பாவும் டுபேவும் 3-வது விக்கெட்டுக்கு 74 பந்துகளில் 165 ரன்கள் எடுத்தார்கள். ஐபிஎல் போட்டியில் 3-வது விக்கெட் மற்றும் அதற்குக் கீழே வேறு எந்தக் கூட்டணியும் இத்தனை ரன்களை எடுத்ததில்லை. இதற்கு முன்பு டெக்கான் சார்ஜர்ஸ் அணியைச் சேர்ந்த கேம்ரூன் ஒயிட்டும் குமார் சங்கக்காராவும் 157 ரன்கள் எடுத்தார்கள். 

* உத்தப்பாவும் டுபேவும் இந்த வருடப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த கூட்டணி என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்கள். 

* முதல்முறையாக சிஎஸ்கே அணியில் இரு பேட்டர்கள் 85 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளார்கள். ஐபிஎல் போட்டியில் இது 3-வது முறை. 

* சிஎஸ்கே நேற்று தனது 200-வது ஐபிஎல் ஆட்டத்தை விளையாடி ஐபிஎல் 2022 போட்டிக்கான தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 

* ஐபிஎல் போட்டியில் முதல் நான்கு ஆட்டங்களில் தோல்வியடைந்த கேப்டன்களின் பட்டியலில் ஜடேஜாவும் இணைந்துள்ளார். இதற்கு முன்பு 2013-ல் புனே வாரியர்ஸ் அணியின் கேப்டனான இருந்த ஆரோன் ஃபிஞ்ச், முதல் நான்கு ஆட்டங்களில் தோல்வியடைந்தார். 

* ஒவ்வொரு வருடமும் முதல் வெற்றியைப் பெற சிஎஸ்கேவுக்குத் தேவைப்பட்ட ஆட்டங்கள் 

1, 2, 2, 1, 2, 2, 2, 1, 1, 1, 1, 2, 5.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com