கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 25ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இன்று விளையாடுகின்றன. அதில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
கொல்கத்தா இதுவரை தாம் களம்கண்ட 5 ஆட்டங்களில் 3-ல் வெற்றியும் 2 தோல்வியும் அதேசமயம் சன்ரைசர்ஸ் இதுவரை களமிறங்கிய 4 ஆட்டங்களில் தலா 2-ல் வெற்றியும் தோல்வியும் சந்தித்துள்ளன.