மீண்டும் பார்முக்கு திரும்பிய ருதுராஜ்: குஜராத்துக்கு 170 ரன்கள் இலக்கு

ருதுராஜ் அதிரடி காரணமாக குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது.
மீண்டும் பார்முக்கு திரும்பிய ருதுராஜ்: குஜராத்துக்கு 170 ரன்கள் இலக்கு

ருதுராஜ் அதிரடி காரணமாக குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் தொடரின் 29ஆவது ஆட்டம் புணேவில் இன்று நடைபெறுகிறது. இதில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ரஷித் கான் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 
ஆனால் உத்தப்பா வந்த வேகத்திலேயே 3 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த மொயின் அலியும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதைத்தொடர்ந்து களம்கண்ட ராயுடு, ருதுராஜுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார். தொடர்ந்து சொதப்பி வந்த ருதுராஜ் இந்த ஆட்டத்தில் மீண்டும் பார்முக்கு திரும்பினார். அவர் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் ராயுடு 31 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மற்றொரு புறம் அதிரடியாக விளையாடிய ருதுராஜ் 48 பந்துகளில் 73 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். பின் வரிசை வீரர்களில் ஷிபம் துபே, ரவீந்திர ஜடேஜா இருவரும் சிறப்பாக விளையாடினர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. ரவீந்திர ஜடேஜா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 12 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். 
ஷிபம் துபே கடைசி பந்தில் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அவர் 17 பந்துகளைச் சந்தித்து 19 ரன்கள் எடுத்தார். குஜராத் அணியில் ஜோசப் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com