டாஸ்: ஐபிஎல் போட்டியில் அணிகளிடம் உள்ள தயக்கம்

இப்படியொரு நிலை எந்த ஐபிஎல் போட்டியிலும் ஏற்பட்டதில்லை.
டாஸ்: ஐபிஎல் போட்டியில் அணிகளிடம் உள்ள தயக்கம்

ஐபிஎல் 2022 போட்டியில் டாஸ் வெல்லும் அணி எதுவாக இருந்தாலும் முதலில் பந்துவீசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளன. 

நேற்று, கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான மோதல், இந்த வருட ஐபிஎல் போட்டியின் 30-வது ஆட்டம். இதுவரையிலான 30 ஆட்டங்களிலும் டாஸ் வென்ற அணிகள், முதலில் பந்துவீசுவதையே தேர்வு செய்துள்ளன.

இப்படியொரு நிலை எந்த ஐபிஎல் போட்டியிலும் ஏற்பட்டதில்லை.

ஐபிஎல்-லில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்ய தேவைப்பட்ட ஆட்டங்களின் எண்ணிக்கை

2008 - 1
2009 - 1
2010 - 1
2011 - 0
2012 - 7
2013 - 3
2014 - 0
2015 - 3
2016 - 0
2017 - 3
2018 - 15
2019 - 4
2020 - 7
2021 - 8
2022 - 30+

இதற்கு இரு காரணங்கள்.

டி20யில் இலக்கை விரட்டுவது எளிது.

இன்னொன்று பனிப்பொழிவு காரணமாக 2-வதாகப் பந்துவீசுவது சிரமம். அந்த நேரத்தில் பேட்டிங் செய்வதுதான் நல்லது. வார இறுதிகளில் பகலில் ஆட்டம் நடைபெற்றாலும் 2-வதாக பேட்டிங் செய்வதையே அணிகள் விரும்புகின்றன. 

டாஸ் வெல்லும் அணிகள், முதலில் ஃபீல்டிங் செய்வதை விரும்பினாலும் எல்லா நேரமும் அவர்கள் எண்ணப்படி அமைந்துவிடுவதில்லை. 

இதுவரை நடைபெற்ற 30 ஆட்டங்களில் டாஸ் வென்ற கேப்டன்கள், முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தாலும் 13 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. 30 முறையும் டாஸ் வென்று 2-வதாக பேட்டிங் செய்ய அணிகள் முடிவெடுத்தாலும் அதில் 17 முறையே அணிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளன. இதனால் 2-வதாக பேட்டிங் செய்தாலும் வெற்றி நிச்சயம் என்பது கிடையாது. ஆனாலும் அணிகள் புதிய முடிவை எடுக்கத் தயங்குகின்றன. பனிப்பொழிவால் பந்துவீச்சுக்கு ஆபத்து வரக்கூடாது என்று முதலிலேயே பந்துவீசத் தீர்மானித்து வருகின்றன. 

ஐபிஎல் 2022: டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்ததில் அணிகள் பெற்ற வெற்றிகள்

ராஜஸ்தான் - 4
குஜராத் - 2
பஞ்சாப் - 2
லக்னெள - 2
தில்லி - 1
சென்னை - 1
ஆர்சிபி - 1

ராஜஸ்தான் அணி சஹால், அஸ்வின் என வலுவான சுழற்பந்து வீச்சைக் கொண்டிருப்பதால் 4 முறை 2-வதாகப் பந்துவீசி ஜெயித்திருக்கிறது. குஜராத், பஞ்சாப், லக்னெள அணிகள் தலா 2 முறை முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளன. சன்ரைசர்ஸ், மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று அணிகளும் இந்தப் பட்டியலில் இல்லை. இதில் சன்ரைசர்ஸ் அணி ஒருமுறை கூட முதலில் பேட்டிங் செய்யவேயில்லை. எல்லா ஆட்டங்களிலும் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்துள்ளது. மும்பை அணி மூன்று முறை டாஸ் வென்று முதலில் பந்துவீசியும் வெற்றி பெற முடியவில்லை. கொல்கத்தா டாஸ் வென்று இருமுறை தோற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com