ராஜஸ்தான் - பஞ்சாப் ஆட்டம்: தமிழக வீரருக்கு மீண்டும் இடமில்லை!

ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணி, ஷாருக் கானை ரூ. 9 கோடிக்குத் தேர்வு செய்தது.
பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால்
பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால்
Updated on
1 min read

ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

10 ஆட்டங்களில் 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது ராஜஸ்தான் அணி. பஞ்சாப் அணி 10 ஆட்டங்களில் 10 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் உள்ளது.

மாலையில் தொடங்கும் ஆட்டமென்பதால் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணியில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் தமிழக வீரர் ஷாருக் கானுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்கவில்லை. ராஜஸ்தான் அணியில் கருண் நாயருக்குப் பதிலாக யாஷஸ்வி ஜெயில்வால் தேர்வாகியுள்ளார். 

ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணி, ஷாருக் கானை ரூ. 9 கோடிக்குத் தேர்வு செய்தது. ஆனால் 7 ஆட்டங்களில் விளையாடிய ஷாருக் கான், 98 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 100.00 மட்டுமே. கடைசி ஓவர்களில் சிக்ஸர்களாக அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷாருக் கான், 98 பந்துகளில் 8 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் மிகவும் குறைவாக உள்ளதால் பஞ்சாப் அணி சமீபத்திய ஆட்டங்களில் அவரை நீக்கிவிட்டது. இனிவரும் ஆட்டங்களிலும் ஷாருக் கானுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com