டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு
By DIN | Published On : 10th May 2022 07:16 PM | Last Updated : 10th May 2022 07:16 PM | அ+அ அ- |

டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் தொடரின் 57ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. மகாராஷ்டிர கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறும் நோக்கில் குஜராத் அணியும், முதல் இடத்தை தக்க வைக்க லக்னெள அணியும் களமிறங்கியுள்ளதால், இன்றைய போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.