முகப்பு விளையாட்டு ஐபிஎல்
போ்ஸ்டோ, லிவிங்ஸ்டன் அதிரடி: பஞ்சாப் அணி 209 ரன்கள் குவிப்பு
By DIN | Published On : 13th May 2022 09:36 PM | Last Updated : 13th May 2022 09:40 PM | அ+அ அ- |

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் தொடரின் 60ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப், பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளெஸ்ஸி பந்துவீச்சை தேர்வு செய்தார். பஞ்சாபில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜானி போ்ஸ்டோ, ஷிகா் தவன் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் தவன் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ராஜபட்ச ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். இந்த நிலையில் லிவிங்ஸ்டன் களம் கண்டார். போ்ஸ்டோ, லிவிங்ஸ்டன் அதிரடியில் பஞ்சாப் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருப்பினும், போ்ஸ்டோ 29 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மயங் அகர்வால் 19 ரன்களில் வெளியேறினார்.
அதிரடியில் கலக்கிய லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் 70 ரன்களுக்கு வெளியேறினார். எஞ்சிய பேட்டர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. பெங்களூரு பௌலிங்கில் ஹர்சல் படேல் 4, ஹசரங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.