காயம் காரணமாக விலகும் கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர்!

காயம் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் பேட் கம்மின்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
காயம் காரணமாக  விலகும் கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர்!

காயம் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் பேட் கம்மின்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.

இடுப்பில் ஏற்பட்ட சிறிய காயத்தினால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் பேட் கம்மின்ஸ் நடப்பு ஐபிஎல் சீசனில் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகுவதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து ட்விட்டர் பதிவு ஒன்றினையும் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில் கூறியிருப்பதாவது, ” அதிகாரபூர்வ அறிவிப்பு. இடுப்பில் ஏற்பட்ட சிறு காயத்தினால் நடப்பு ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகுகிறார். விரைவில் குணமடைந்து வாருங்கள். நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

அணியின் சார்பில் வீடியோ பதிவு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பேட் கம்மின்ஸ், “நான் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து வீரர்களுக்கும், உதவி பணியாளர்களுக்கும், உணவக பணியாளர்களுக்கும் நன்றி. இந்த 5-6 வாரங்கள் மறக்க முடியாதவை. அடுத்து கொல்கத்தா விளையாடவுள்ள போட்டிகளுக்கு எனது வாழ்த்துகள். நான் எனது அணியினை தொடர்ந்து உற்சாகப்படுத்துவேன். நாங்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” எனப் பேசியுள்ளார்.

பேட் கம்மின்ஸ் இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 5 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் விளையாடிய இந்த 5 போட்டிகளில் 63 ரன்கள் குவித்துள்ளார். அதில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 15 பந்துகளில் 56 ரன்கள் குவித்ததும் அடங்கும். பந்து வீச்சில் இந்த சீசனில் கம்மின்ஸ் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவரது சிறந்த பந்து வீச்சு 22/3 ஆகும். இந்த சிறந்த பந்து வீச்சினையும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவே வெளிப்படுத்தினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும் அடைந்துள்ளது. புள்ளிப்பட்டியலில் அந்த அணி 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com