முகப்பு விளையாட்டு ஐபிஎல்
ஸ்ரேயஸ் ஐயர் இனி சுதந்திரமாக விளையாடலாம் : சுனில் கவாஸ்கர்
By DIN | Published On : 14th May 2022 05:27 PM | Last Updated : 14th May 2022 05:27 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நடுவரிசை ஆட்டக்காரர்கள் பேட்டிங்கில் தங்களது பங்களிப்பை கொடுக்கத் தொடங்கிவிட்டதால் ஸ்ரேயஸ் ஐயர் இனி சுதந்திரமாக விளையாடலாம் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், சிறப்பாக நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் 15-வது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நடுவரிசை ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடத்தொடங்கியுள்ளது அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் சுதந்திரமாக பேட்டிங் செய்ய உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் அணிக்கு ரன் சேர்க்க உதவினார். இதனால், ஸ்ரேயஸ் ஐயர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் லைவ் நிகழ்ச்சியில் கவாஸ்கர் பேசியதாவது, “ ஸ்ரேயஸ் ஐயர் கொல்கத்தா அணியின் முதன்மையான ஆட்டக்காரர். கொல்கத்தா அணி மட்டுமல்லாது அவர் எந்த அணிக்காக விளையாடினாலும் சிறப்பாக ஆடும் திறன் கொண்டவர். ஸ்ரேயஸ் ஐயர் ஒருவரே பேட்டிங் சுமையை ஏற்காமல் இருப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. சமீபத்திய போட்டிகளில் நிதீஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடுவது ஸ்ரேயர் ஐயர் சுதந்திரமாக பேட்டிங் ஆடுவதற்கு உதவியாக இருக்கும். அதனால் அவர் தொடக்கம் முதலே பெரிய ஷாட்டுகளை விளையாடுவார்” எனப் பேசியுள்ளார்.