கேப்டன் பதவிக்கு கே.எல்.ராகுல் பொருத்தமானவர் இல்லை : முன்னாள் வீரர்கள் விமர்சனம்

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் லக்னௌ அணியின் கேப்டன் 19வது ஓவர் வரைக்கும் பொறுமையாக விளையாடியதுதான் தோல்விக்கு காரணமென முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கேப்டன் பதவிக்கு கே.எல்.ராகுல்  பொருத்தமானவர் இல்லை : முன்னாள் வீரர்கள் விமர்சனம்

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் லக்னௌ அணியின் கேப்டன் 19வது ஓவர் வரைக்கும் பொறுமையாக விளையாடியதுதான் தோல்விக்கு காரணமென முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

எலிமினேட்டர் போட்டியில் லக்னௌ அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியிடம் தோல்வியுற்றது. 

“எல்லா முக்கியமான ஆட்டங்களிலும் சரியாக விளாயாடுவதில்லை. அவரால் மிகப்பெரிய ஷாட்டுகள் அடிக்க முடிகிறது. ஆனால் அவர் நீண்ட நேரம் விளையாட நினைத்து குறைவான ஸ்டிரைக் ரேட்டுடனே விளையாடுகிறார். அவர் கேப்டனாகவே இருந்தாலும் இந்த பழக்கத்தை மாற்ற வேண்டும். நான் பயிற்சியாளராக இருந்தால் விரைவாக ரன் அடிக்க சொல்லுவேன்.

16வது ஓவர் வரைக்கும் 120 ஸ்டிரைக்ரேட்டில் விளையாடுகிறார். இது அவர் மாதிரியான வீரர்களுக்கு ஏற்றதல்ல. இதே அவரது சர்வதேச டி20 ஸ்டிரைக் ரேட் (கோலி அல்லது ரோகித் தலைமையில் விளையாடும்போது) அபாரமாக இருக்கிறது. 

விராட் கோலி, ரோகித் சர்மா, தோனி ஆகியோர்கள் கேப்டன்சியின் பொறுப்பை விரும்புகிறார்கள். ஆனால், கே.எல்.ராகுலுக்கு அந்த மனப்பக்குவம் இல்லை. அவர் நல்ல வீரராக இருந்தாலும் கேப்டன்சி என்பது வேறு” என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறினார். 

“அவரது பொறுமையான அணுகுமுறை ஆட்டத்தின் இறுதியில் பெரிய சிக்கலுக்குக் கொண்டு செல்கிறது.  அவர் எப்போதுமே இப்படித்தான் செய்கிறார். ஏன் முன்னமே பெரிய ஷாட் அடிக்க முயற்சித்து இருக்கலாமே? பவர் ப்ளேவில் ரிஸ்க் எடுக்காமல் 60பந்துகளுக்கு 42ரன்கள் எடுப்பது இறுதியில் சிக்கலைத் தருகிறது” என வெட்டோரி கூறினார். 

“சில நேரங்களில் நாம் கடைசி வரைக்கும் காத்திருக்கலாம். ஆனால் ஆர்சிபி  அணிக்கு கடைசியில் ஹர்சல் பட்டேல் இருக்கிறார். அவர் அங்கு சிறப்பாக பந்து வீசுவதால் முன்னமே ரன்களை குவிக்கப் பார்க்க வேண்டும். 9-13 ஓவர் வரை நன்றாக விளையாட வேண்டும். தீபக் ஹூடா சரியாக விளையாடினார். ராகுலும் அது போல விளையாடியிருக்க வேண்டும்” என ரவி சாஸ்திரி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com