ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ் படம் | மும்பை இந்தியன்ஸ் எக்ஸ்தளப் பதிவு

மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீசியது.

அதன்படி, சண்டிகரில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் இஷான் கிஷன் 8 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.

நிதானமாக ஆடிய ரோகித் சர்மா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுபுறம் நிலைத்து நின்று அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 53 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்தார். அவருக்கு பக்கபலமாக நின்ற திலக் வர்மா மறுபுறம் அதிரடியில் இறங்கினார். அவர் 18 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டிம் டேவிட் 7 பந்துகளில் 14 ரன்கள் திரட்ட, இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து, 193 ரன்கள் வெற்றி இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com