ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!
படம் | ஐபிஎல் எக்ஸ் தளப் பதிவு

நடப்பு ஐபிஎல் தொடரின் 40-வது போட்டி புதுதில்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் திடலில் நடைபெற்று வருகிறது. தில்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல்(ஏப்.24) போட்டியில் டாஸ் வென்ற குஜராஜ் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

தில்லி கேப்பிட்டல்ஸ் அணியில், பிருத்வி ஷா, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ஷாய் ஹோப், ரிஷப் பந்த் (கேப்டன்/ விக்கெட் கீப்பிங்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார் ஆகியோர் விளையாடுகின்றனர்.

குஜராஜ் டைட்டன்ஸ் அணியில் விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பிங்), ஷுப்மான் கில் (கேப்டன்), டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ராகுல் தெவாடியா, ஷாருக் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, மோகித் சர்மா, சந்தீப் வாரியர் ஆகியோர் விளையாடுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com