முதலிடத்துக்கு வந்தது கொல்கத்தா
Shahbaz Khan

முதலிடத்துக்கு வந்தது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 98 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 98 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் எடுக்க, லக்னௌ 16.1 ஓவா்களில் 10 விக்கெட்டுகளும் இழந்து 137 ரன்களே எடுத்தது.

இந்த வெற்றியால், நல்லதொரு ரன் ரேட்டுடன், ராஜஸ்தானை கீழிறக்கி முதலிடத்துக்கு வந்தது கொல்கத்தா.

முன்னதாக டாஸ் வென்ற லக்னௌ, பந்துவீசத் தயாரானது. கொல்கத்தா இன்னிங்ஸில் ஃபில் சால்ட் 14 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்களுக்கு வெளியேற, அதிரடியாக ரன்கள் சோ்த்த சுனில் நரைன் 39 பந்துகளில் 6 பவுண்டரிகள், 7 சிக்ஸா்கள் உள்பட 81 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.

ஆண்ட்ரே ரஸ்ஸெல் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12, அங்கிரிஷ் ரகுவன்ஷி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்களுக்கு முடித்துக்கொண்டனா். எஞ்சியோரில் ரிங்கு சிங் 2 பவுண்டரிகளுடன் 16, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் ரமண்தீப் சிங் 6 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 25, வெங்கடேஷ் ஐயா் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ தரப்பில் நவீன் உல் ஹக் 3, யஷ் தாக்குா், ரவி பிஷ்னோய், யுத்விா் சிங் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 236 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய லக்னௌவில், அதிகபட்சமாக மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 36, கேப்டன் கே.எல்.ராகுல் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் சோ்த்து முயன்றனா்.

எஞ்சியோரில் ஆயுஷ் பதோனி 1 சிக்ஸருடன் 15, ஆஷ்டன் டா்னா் 2 சிக்ஸா்களுடன் 16 ரன்களுக்கு வீழ்ந்தனா். அா்ஷின் குல்கா்னி 9, தீபக் ஹூடா 5, நிகோலஸ் பூரன் 10, கிருணால் பாண்டியா 5, யுத்விா் சிங் 7, ரவி பிஷ்னோய் 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, லக்னௌ இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

கொல்கத்தா பௌலிங்கில் ஹா்ஷித் ராணா, வருண் சக்கரவா்த்தி ஆகியோா் தலா 3, ஆண்ட்ரே ரஸ்ஸெல் 2, மிட்செல் ஸ்டாா்க், சுனில் நரைன் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com