ஐபிஎல்: தொடர்ச்சியாக பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற அணிகள்

2016 முதல் தொடர்ச்சியாக ஐந்து வருடங்களாக பிளேஆஃப்புக்கு சன்ரைசர்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.
ஐபிஎல்: தொடர்ச்சியாக பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற அணிகள்

இந்த வருட ஐபிஎல் போட்டி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றதன் மூலம் கடந்த ஐந்து வருடங்களாகத் தொடர்ச்சியாக பிளேஆஃப்புக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தகுதி பெற்றுள்ளது.

இந்த வருட ஐபிஎல் போட்டியின் லீக் சுற்று முடிவடைந்துள்ளது. மும்பை, தில்லி,  ஹைதராபாத், பெங்களூர் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான், சென்னை, பஞ்சாப் அணிகள் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

இன்று முதல் இந்த வருட ஐபிஎல் போட்டியின் பிளேஆஃப் ஆட்டங்கள் தொடங்குகின்றன. துபையில் இன்று நடைபெறவுள்ள முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் மும்பை - தில்லி அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும். தோல்வியடையும் அணி, ஹைதராபாத் - ஆர்சிபி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதிச்சுற்றில் மோதும். இதில் வெல்லும் அணி, இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும்.

இந்நிலையில் 2016 முதல் தொடர்ச்சியாக ஐந்து வருடங்களாக பிளேஆஃப்புக்கு சன்ரைசர்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. இதன்மூலம் தொடர்ச்சியாக அதிகமுறை பிளேஆஃப்புக்குத் தகுதி பெற அணிகளில் ஹைதராபாத்தும் இணைந்துள்ளது.

தொடர்ச்சியாக பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற அணிகள்

சிஎஸ்கே - 8 முறை (2008-15)
மும்பை - 6 (2010-15)
சன்ரைசர்ஸ் - 5 (2016-20)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com