ஒரு ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்: பும்ராவின் புதிய சாதனை

மும்பை பந்துவீச்சாளர் பும்ரா 14 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்...
ஒரு ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்: பும்ராவின் புதிய சாதனை

ஐபிஎல் போட்டியின் தகுதிச்சுற்று (குவாலிஃபயர் 1) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 57 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி, இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. 

துபையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய மும்பை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய தில்லி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களே எடுத்தது. மும்பை பந்துவீச்சாளர் பும்ரா ஆட்டநாயகன் ஆனார். 

மும்பை இறுதிச்சுற்றுக்கு வருவது இது 6-ஆவது முறையாகும். மறுபுறம், தோல்வியைத் தழுவிய தில்லி இறுதிச்சுற்றுக்கு வர மேலும் ஓர் வாய்ப்பு உள்ளது. இன்று நடைபெறும் ஹைதராபாத் - ஆர்சிபி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதிச்சுற்றில் தில்லி அணி மோதும். இதில் வெல்லும் அணி, இறுதிச்சுற்றில் மும்பையுடன் மோதும். 

நேற்றைய ஆட்டத்தில் மும்பை பந்துவீச்சாளர் பும்ரா 14 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதன்மூலம் இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் ஐபிஎல் 2020 போட்டியில் 27 விக்கெட்டுகள் எடுத்துள்ள பும்ரா, ஒரு ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார். 2017-ல் புவனேஸ்வர் குமார் 26 விக்கெட்டுகள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதை பும்ரா முறியடித்துள்ளார். 

ஒரு ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்துவீச்சாளர் 

27 பும்ரா (2020) *
26 புவனேஸ்வர் குமார் (2017)
24 ஹர்பஜன் சிங் (2013)
24 உனாட்கட் (2017)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com