ஐபிஎல்: அதிக டாட் பந்துகளை வீசிய ஆர்ச்சர் & பும்ரா

ஆர்ச்சர் 14 ஆட்டங்களில் 55.4 ஓவர்கள் வீசி 175 டாட் பந்துகளை வீசியுள்ளார்...
ஐபிஎல்: அதிக டாட் பந்துகளை வீசிய ஆர்ச்சர் & பும்ரா

ஐபிஎல் போட்டியில் பும்ராவும் ஆர்ச்சரும் அதிகமான டாட் பந்துகள் எனப்படும் ரன்கள் எடுக்க முடியாத பந்துகளை வீசி தங்கள் அணிக்குப் பெரிதும் உதவியுள்ளார்கள்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

முன்னதாக முதலில் பேட் செய்த தில்லி அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது. டிரென்ட் போல்ட் 4 ஓவா்களில் 30 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னா் ஆடிய மும்பை 18.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இதன் மூலம் ஒரு கேப்டனாக ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார் ரோஹித் சர்மா.

ஆட்ட நாயகனாக டிரெண்ட் போல்டும் தொடர் நாயகனாக ஆர்ச்சரும் தேர்வாகியுள்ளார்கள்.

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியில் டாட் பந்து எனப்படும் ரன்கள் கொடுக்காத பந்துகளை ராஜஸ்தானின் ஆர்ச்சரும் மும்பையின் பும்ராவும் அதிகமாக வீசியுள்ளார்கள்.

பும்ராவும் ஆர்ச்சரும் தலா 175 டாட் பந்துகளை வீசியுள்ளார்கள். ஆர்ச்சர் 14 ஆட்டங்களில் 55.4 ஓவர்கள் வீசி 175 டாட் பந்துகளை வீசியுள்ளார். பும்ரா 15 ஆட்டங்களில் 60 ஓவர்களில் 175 டாட் பந்துகளை வீசியுள்ளார். ஆர்ச்சரின் எகானமி - 6.55, பும்ராவின் எகானமி - 6.73. இதன் அடிப்படையில் இந்த ஐபிஎல் போட்டியின் சிறந்த பந்துவீச்சாளர் என ஆர்ச்சரைக் குறிப்பிடலாம். அதனால் தான் அவருக்குத் தொடர் நாயகன் விருது கிடைத்துள்ளது.

ஐபிஎல் 2020 போட்டியில் அதிகமான டாட் பந்துகளை வீசியவர்கள்

ஆர்ச்சர் (ராஜஸ்தான்) - 175
பும்ரா (மும்பை) - 175
ரஷித் கான் (சன்ரைசர்ஸ்) - 168
ஆன்ரிச் நோர்கியோ - 160
டிரெண்ட் போல்ட் - 157.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com