ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: முதலிடத்தில் மும்பை, கடைசி இடத்தில் சென்னை!

4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: முதலிடத்தில் மும்பை, கடைசி இடத்தில் சென்னை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது.

முன்னதாக, முதலில் பேட் செய்த மும்பை இண்டியன்ஸ் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.

இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி, 2-ஆவது வெற்றியைப் பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிஎஸ்கே அணி தொடர்ந்து கடைசி இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

புள்ளிகள் பட்டியல்

 அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 மும்பை 4 2 2 4 +1.094
 தில்லி  3 2 1 4 +0.483
 கொல்கத்தா 3 2 1 4 +0.117
 ராஜஸ்தான் 3 2 1 4 -0.219
 பெங்களூர் 3 2 1 4 -1.450
 பஞ்சாப் 4 1 3 2 +0.521
 ஹைதராபாத் 3 1 2 2 -0.228
  சென்னை 3 1 2 2 -0.840

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com