சந்தேக வலையில் சுனில் நரைன் பந்துவீச்சு: கொல்கத்தா அணி பதில்!

சுனில் நரைனின் பந்துவீச்சு குறித்து நடுவர்கள் புகார் அளித்துள்ளது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கும்...
சந்தேக வலையில் சுனில் நரைன் பந்துவீச்சு: கொல்கத்தா அணி பதில்!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா ஆல்ரவுண்டர் சுனில் நரைனின் பந்துவீச்சு குறித்து நடுவர்கள் புகார் அளித்துள்ளார்கள். இந்த ஆட்டத்தில் சுனில் நரைன் பந்துவீசியபோது அவருடைய முழங்கை ஐசிசியால் அனுமதிக்கப்பட்ட அளவான 15 டிகிரிக்கு மேல் வளைவது கண்டறியப்பட்டது. இதனால் நரைனுக்கு ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து விதிகளை மீறும் விதத்தில் அவருடைய பந்துவீச்சு ஆக்‌ஷன் மீண்டும் அமைந்தால் இடைக்காலத் தடை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சுனில் நரைனின் பந்துவீச்சு குறித்து நடுவர்கள் புகார் அளித்துள்ளது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கும் நரைனுக்கும் ஆச்சர்யமளித்துள்ளது. 2012 முதல் 115-க்கும் அதிகமான ஐபிஎல் ஆட்டங்களில் நரைன் விளையாடியுள்ளார். கடைசியாகப் புகார் அளிக்கப்பட்டு ஐசிசியால் பந்துவீச அனுமதிக்கப்பட்ட 2015-க்குப் பிறகு 68 ஆட்டங்களில் அவர் விளையாடியுள்ளார். 

இந்த வருடப் போட்டியில் அவர் 6-வது ஆட்டத்தை விளையாடியுள்ளார். இதுவரை அவருடைய பந்துவீச்சு முறை குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை. 

எனினும் இதுதொடர்பான ஐபிஎல் நிர்வாகத்தின் நடவடிக்கையை மதிக்கிறோம். ஐபிஎல் நிர்வாகத்துடன் இணைந்து பேசிவருகிறோம். விரைவில் இதற்கான முடிவு எட்டப்படும் என நம்புகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com