200 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடிய முதல் வீரர்: சாதனையை அறியாத தோனி

2008 முதல் ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடி வருகிறார்.
200 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடிய முதல் வீரர்: சாதனையை அறியாத தோனி

ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். 

அது அவருடைய 200-வது ஆட்டம். இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் 200 ஆட்டங்களில் விளையாடியுள்ள முதல் வீரர் என்கிற சாதனையை அவர் படைத்துள்ளார். 

ஐபிஎல் தொடங்கிய 2008 முதல் ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடி வருகிறார். 2016, 2017 ஆண்டுகளில் புணே அணிக்காக விளையாடினார். மற்றபடி அனைத்து ஆண்டுகளிலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக விளையாடியுள்ளார்.

தோனிக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் ரோஹித் சர்மா. அவர் இதுவரை 197 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

ஆட்டம் தொடங்கியபோது இதுபற்றி தோனியிடம் கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்: நீங்கள் சொன்ன பிறகுதான் எனக்கு இதுபற்றி தெரியும். இதைப் பற்றி எண்ணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனாலும் 200 என்பது எண்ணிக்கை தான். காயங்கள் அதிகம் இல்லாமல் இந்தப் போட்டியில் நீண்ட நாள்கள் விளையாடி வருவது என் அதிர்ஷ்டம் என நினைக்கிறேன் என்றார்.

ஐபிஎல்: தோனி

ஆட்டங்கள் - 200
ரன்கள் - 4596
அதிகபட்ச ரன்கள் - 84*
சராசரி - 41.40
ஸ்டிரைக் ரேட் - 137.35
அரை சதங்கள் - 23 
பவுண்டரிகள் - 308
சிக்ஸர்கள் - 215

- ஒரு கேப்டனாக 3 ஐபிஎல் கோப்பைகள்
- ஐபிஎல் போட்டியில் 100 வெற்றிகளைக் கண்ட ஒரே கேப்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com