அடுத்த வருடமும் தோனி தான் கேப்டன்: சிஎஸ்கே காசி விஸ்வநாதன்

எங்களுக்காக மூன்று ஐபிஎல் கோப்பைகளைப் பெற்றுத் தந்துள்ளார்.
அடுத்த வருடமும் தோனி தான் கேப்டன்: சிஎஸ்கே காசி விஸ்வநாதன்

ஐபிஎல்-லில் பிளேஆஃப் போட்டியிலிருந்து சிஎஸ்கே அணி வெளியேறியுள்ளது. ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாததால் அதன் ரசிகர்கள் ஏமாற்றமும் வேதனையும் அடைந்துள்ளார்கள்.  இதுவரை விளையாடிய 12 ஆட்டங்களில் 4-ல் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் தோனியின் பேட்டிங்கும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. 12 ஆட்டங்களில் 199 ரன்கள் தான் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 118.45. அடுத்த ஆறு மாதங்களில் மற்றொரு ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ளதால் சிஎஸ்கே அணிக்கு தோனி மீண்டும் தலைமை தாங்குவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

ஒரு பேட்டியில் சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியதாவது:

நிச்சயமாக, அடுத்த வருடமும் சிஎஸ்கே அணிக்கு தோனி தான் தலைமை தாங்குவார் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளேன். எங்களுக்காக மூன்று ஐபிஎல் கோப்பைகளைப் பெற்றுத் தந்துள்ளார். முதல்முறையாக பிளேஆஃப்புக்கு தகுதி பெறவில்லை. மற்ற எல்லா வருடங்களிலும் தகுதி பெற்றுள்ளோம். இந்தச் சாதனை வேறு எந்த அணிக்கும் இல்லை. ஒரு வருடம் மோசமாக விளையாடியதால் உடனே எல்லாவற்றையும் மாற்றவேண்டும் என்பதில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com