டாஸ் வென்ற வார்னர் பேட்டிங் தேர்வு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-இன் 8-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் காயம் காரணமாக விலகிய மிட்செல் மார்ஷுக்குப் பதில் முகமது நபி சேர்க்கப்பட்டுள்ளார். இதுதவிர விஜய் சங்கர், சந்தீப் சர்மா ஆகியோருக்குப் பதிலாக ரித்திமான் சாஹா மற்றும் கலீல் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா அணியில் சந்தீப் வாரியர், நிகில் நாயக்குக்குப் பதில் கம்லேஷ் நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com