ஐபிஎல்: புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்ட சிஎஸ்கே!

புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திலிருந்து 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது ஹைதராபாத் அணி.
ஐபிஎல்: புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்ட சிஎஸ்கே!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது. இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

முன்னதாக முதலில் பேட் செய்த சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சோ்த்தது. பின்னா் ஆடிய தில்லி அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திலிருந்து 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது ஹைதராபாத் அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 புள்ளிகளுடன் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

புள்ளிகள் பட்டியல்

 அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 ராஜஸ்தான் 2 2 0 4 +0.615
 தில்லி 3 2 1 4 +0.483
 பெங்களூர் 3 2 1 4 -1.450
 பஞ்சாப் 3 1 2 2 +1.498
 மும்பை 3 1 2 2 +0.654
 ஹைதராபாத் 3 1 2 2 -0.228
 கொல்கத்தா 2 1 1 2 -0.767
  சென்னை 3 1 2 2 -0.840

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com