ஐபிஎல்லில் புதிய சாதனை: அதிக வெற்றிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஐபிஎல் போட்டி எந்தளவுக்குச் சவாலாகவும் கடுமையான போட்டியாகவும் மாறியுள்ளது என்பதற்கு...
ஐபிஎல்லில் புதிய சாதனை: அதிக வெற்றிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

இந்த வருட ஐபிஎல் போட்டியின் லீக் சுற்று முடிவடைந்துள்ளது. மும்பை, தில்லி,  ஹைதராபாத், பெங்களூர் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான், சென்னை, பஞ்சாப் அணிகள் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

வழக்கமாக ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும் தலா 14 ஆட்டங்களே விளையாடும். 2011-ல் 10 அணிகள் போட்டியிட்டும் தலா 14 ஆட்டங்களில் தான் விளையாடின. ஆனால் 2012, 2013 ஆண்டுகளில் 9 அணிகள் போட்டியிட்டு தலா 16 ஆட்டங்களில் விளையாடின. அப்போதுகூட எந்த அணியும் ஆறு வெற்றிகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று கடைசி இடம் பிடிக்கவில்லை.

ஆனால் இம்முறை 8 அணிகள் போட்டியிட்டு தலா 14 ஆட்டங்கள் ஆடியும் கடைசி இடம் பிடித்துள்ள ராஜஸ்தான் அணி ஆறு வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. கூடுதலாக ஒரு வெற்றி பெற்றிருந்தால் அந்த அணியால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றிருக்க முடியும். அது இல்லாத காரணத்தால் தற்போது கடைசி இடத்தில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 

ஐபிஎல் போட்டியில் கடைசி இடம் பிடித்த எந்த ஒரு அணியும் 6 வெற்றிகளைப் பெற்றதில்லை. கடந்த வருடம் ஆர்சிபி அணி 11 புள்ளிகளைப் பெற்று கடைசி இடம் பிடித்ததே சாதனையாக இருந்தது. அதை இந்தமுறை ராஜஸ்தான் முறியடித்துள்ளது.

ஐபிஎல் போட்டி எந்தளவுக்குச் சவாலாகவும் கடுமையான போட்டியாகவும் மாறியுள்ளது என்பதற்குக் கடைசி இரு வருடங்களே உதாரணம். எல்லா அணிகளும் கிட்டத்தட்ட சம அளவில் பலம் கொண்டு அதிக வெற்றிகளைப் பெறுகின்றன. கொஞ்சம் அசந்தால் போதும் கடைசி இடம் கிடைத்துவிடும்.

ஐபிஎல்: லீக் சுற்று முடிவில் கடைசி இடத்தைப் பிடித்த அணிகள் 

2008: 4 புள்ளிகள் (ஹைதராபாத்)
2009: 7 புள்ளிகள் (கொல்கத்தா)
2010: 8 புள்ளிகள் (பஞ்சாப்)
2011: 9 புள்ளிகள் (தில்லி, புணே) (10 அணிகள், 14 ஆட்டங்கள்)
2012: 8 புள்ளிகள் (புணே) (9 அணிகள், 16 ஆட்டங்கள்)
2013: 6 புள்ளிகள் (தில்லி) (9 அணிகள், 16 ஆட்டங்கள்)
2014: 4 புள்ளிகள் (தில்லி) 
2015: 6 புள்ளிகள் (பஞ்சாப்)
2016: 8 புள்ளிகள் (பஞ்சாப்) 
2017: 7 புள்ளிகள் (ஆர்சிபி)
2018: 10 புள்ளிகள் (தில்லி) 
2019: 11 புள்ளிகள் (ஆர்சிபி, ராஜஸ்தான்)
2020: 12 புள்ளிகள் (ராஜஸ்தான், சென்னை, பஞ்சாப்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com