மகளிர் டி20 சேலஞ்ச்: முதல் ஆட்டத்தில் வெலாசிட்டி வெற்றி

மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் வெலாசிட்டி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சூப்பர்நோவாஸ் அணியை வீழ்த்தியது. 
மகளிர் டி20 சேலஞ்ச்: முதல் ஆட்டத்தில் வெலாசிட்டி வெற்றி

ஷார்ஜா: மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் வெலாசிட்டி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சூப்பர்நோவாஸ் அணியை வீழ்த்தியது. 
ஷார்ஜாவில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சூப்பர்நோவாஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வெலாசிட்டி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து வென்றது. அந்த அணியின் சுனே லஸ் ஆட்டநாயகி ஆனார். 
முன்னதாக டாஸ் வென்ற வெலாசிட்டி பெüலிங் செய்ய தீர்மானித்தது. சூப்பர்நோவாஸ் இன்னிங்ûஸ பிரியா புனியா - சமாரி அட்டப்பட்டு கூட்டணி தொடங்கியது. 
இதில் புனியா 2 பவுண்டரிகள் உள்பட 11 ரன்கள் சேர்த்து 6-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சமாரி அட்டப்பட்டு அதிரடி காட்ட, பிரியாவை அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிகஸ் 1 பவுண்டரி உள்பட 7 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். 
பின்னர் கேப்டன் ஹர்மன்பிரீத் கெüர் களம் கண்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுபுறம் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 44 ரன்கள் சேர்த்து சமாரி அட்டப்பட்டு வீழ்ந்தார். 
தொடர்ந்து சசிகலா சிறீவர்தனா பேட் செய்ய வர, 1 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 31 ரன்கள் சேர்த்திருந்த ஹர்மன்பிரீத் கெüர் விக்கெட்டை இழந்தார். 
அடுத்து ஆட வந்த பூஜா வஸ்த்ரகர் டக் அவுட்டானார். பின்னர் ராதா யாதவ் களம் காண, மறுமுனையில் சசிகலா சிறீவர்தனா 1 பவுண்டரி உள்பட 18 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் செய்யப்பட்டார். பின்னர் ஷகீரா செல்மன் பேட் செய்ய வர, ராதா யாதவ் 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். கடைசி விக்கெட்டாக ஷகீரா 5 ரன்களுக்கு பெüல்டானார். 
வெலாசிட்டி அணியில் ஏக்தா பிஷ்த் 3, லெய் காஸ்பெரெக், ஜஹனாரா ஆலம் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். 
பின்னர் 127 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய வெலாசிட்டியின் இன்னிங்ûஸ டேனி வியாட் - ஷஃபாலி வர்மா கூட்டணி தொடங்கியது. டேனி முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக, கேப்டன் மிதாலி ராஜ் களம் கண்டார். 
மறுமுனையில் ஷஃபாலி 4 பவுண்டரிகள் உள்பட 17 ரன்கள் சேர்த்து 3-ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வேதா கிருஷ்ணமூர்த்தி ஆட வந்தார். இந்நிலையில் மிதாலி 7 ரன்களுக்கு நடையைக் கட்ட, சுஷ்மா வர்மா களம் புகுந்தார். 
மறுமுனையில் 4 பவுண்டரிகள் உள்பட 29 ரன்கள் சேர்த்திருந்த வேதா 13-ஆவது ஓவரில் வீழ்ந்தார். பின்னர் வந்த சுனே லஸ் அதிரடியாக ஆடி ஸ்கோரை விறுவிறுவென உயர்த்தினார். 
மறுமுனையில் கடைசி விக்கெட்டாக சுஷ்மா வர்மா 2 சிக்ஸர்கள் உள்பட 34 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். வெலாசிட்டி வெற்றி இலக்கை எட்டியபோது சுனே லஸ் 4 பவுண்டரி, 1 சிக்ஸர் உள்பட 37, சிக்ஷா பாண்டே 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
சூப்பர்நோவாஸ் தரப்பில் அயபோங்கா ககா 2, ராதா யாதவ், பூனம் யாதவ், சசிகலா சிறீவர்தனே தலா 1 விக்கெட் சாய்த்தனர். 

சுருக்கமான ஸ்கோர்

சூப்பர்நோவாஸ் - 126/8 
சமாரி அட்டப்பட்டு      44 (39) 
ஹர்மன்பிரீத் கெüர்     31 (27) 
 
பந்துவீச்சு 

ஏக்தா பிஷ்த்     3/22 
லெய் காஸ்பெரெக்     2/23

வெலாசிட்டி - 129/5 
சுனே லஸ்     37* (21) 
சுஷ்மா வர்மா     34 (33) 
  
பந்துவீச்சு 

அயபோங்கா ககா    2/27 
ராதா யாதவ்     1/25

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com