மீண்டும் முதலிடத்தில் டெல்லி: ராஜஸ்தானை வீழ்த்தி முன்னேறியது

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ûஸ 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் வீழ்த்தியது.
மீண்டும் முதலிடத்தில் டெல்லி: ராஜஸ்தானை வீழ்த்தி முன்னேறியது

துபை,: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ûஸ 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் வீழ்த்தியது. இதனால் புள்ளிகள் பட்டியலில் அந்த அணி மீண்டும் முதலிடத்துக்கு வந்தது. 

துபையில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களே எடுத்து வீழ்ந்தது. டெல்லி வீரர் அன்ரிச் நார்ட்ஜே ஆட்டநாயகன் ஆனார். 

இந்த ஆட்டத்தில் டெல்லி அணியில் ஹர்ஷல் படேலுக்குப் பதிலாக துஷார் தேஷ்பாண்டே சேர்க்கப்பட்டிருந்தார். ராஜஸ்தான் அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. 

முதலில் பேட் செய்த டெல்லியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா - ஷிகர் தவன் களம் கண்டனர். அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஸ்டம்ப்பை பறிகொடுத்தார் பிருத்வி ஷா. பின்னர் வந்த அஜிங்க்ய ரஹானே 2 ரன்களே சேர்த்தார். 

மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த ஷிகர் தவன் பார்ட்னர்ஷிப் இன்றி தடுமாறிவந்த நிலையில், அவருடன் இணைந்தார் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர். இருவருமே அரைசதம் கடந்தனர். ஷிகர் தவன் - ஷ்ரேயஸ் ஐயர் கூட்டணி அருமையாக ஆடி 3-ஆவது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்தது. 

ஆட்டத்தின் 12-ஆவது ஓவரில் ஷ்ரேயஸ் கோபால் வீசிய பந்தை அடிக்க முயன்ற தவன், கார்த்திக் தியாகி கைகளில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 57 ரன்கள் சேர்த்திருந்தார் தவன். அவரை அடுத்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் களத்துக்கு வந்தார். 

இந்நிலையில், 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 53 ரன்கள் சேர்த்திருந்த ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழந்தார். கார்த்தி தியாகி வீசிய 16-ஆவது ஓவரில் அவரடித்த பந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் கைகளில் தஞ்சமானது. பின்னர் அலெக்ஸ் கேரி ஆட வந்தார். ஸ்டாய்னிஸ் 18, அலெக்ஸ் கேரி 14, அக்ஸர் படேல் 7 ரன்கள் எடுத்தனர்.  

ராஜஸ்தான் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3, ஜெயதேவ் உனத்கட் 2, கார்த்திக் தியாகி, ஷ்ரேயஸ் கோபால் தலா 1 விக்கெட் சாய்த்தனர். 

பின்னர் 162 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ராஜஸ்தானில் பென் ஸ்டோக்ஸ் அருமையான தொடக்கத்தை அளித்தார்.  ஜோஸ் பட்லர் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 22 ரன்கள் சேர்த்த நிலையில்,  பெளல்டானார். அடுத்து வந்த கேப்டன் ஸ்மித் 1 ரன் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். பின்னர் சஞ்சு சாம்சன் களம் காண, மறுமுனையில் துஷார் தேஷ்பாண்டே வீசிய 11-ஆவது ஓவரில் லலித் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் பென் ஸ்டோக்ஸ். அவர் 6 பவுண்டரிகள் உள்பட 41 ரன்கள் அடித்திருந்தார். 

2 சிக்ஸர்கள் விளாசிய சஞ்சு சாம்சன் 25 ரன்கள் எடுத்து அக்ஸர் படேல் வீசிய 12-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் விளாசிய ராபின் உத்தப்பா 32 ரன்களுக்கு பெளல்டானார். ரியான் பராக் 1, ஜோஃப்ரா ஆர்ச்சர் 1, ஷ்ரேயஸ் கோபால் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஓவர்கள் முடிவில் ராகுல் தெவதியா 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 
டெல்லி தரப்பில் தேஷ்பாண்டே, நார்ட்ஜே தலா 2, ரபாடா, அஸ்வின், அக்ஸர் தலா 1 விக்கெட் சாய்த்தனர். 

புள்ளிகள் பட்டியல்

(டெல்லி-ராஜஸ்தான் ஆட்டம் வரை)

டெல்லி    8    6    2    12
மும்பை    7    5    2    10
பெங்களூர்    7    5    2    10
கொல்கத்தா    7    4    3    8
ஹைதராபாத்    8    3    5    6
சென்னை    8    3    5    6
ராஜஸ்தான்    8    3    5    6
பஞ்சாப்    7    1    6    2


சுருக்கமான ஸ்கோர்


டெல்லி 161/7 
ஷிகர் தவன்    57 (33) 
ஷ்ரேயஸ் ஐயர்    53 (43) 
மார்கஸ் ஸ்டாய்னிஸ்    18 (19) 

பந்து வீச்சு
ஜோஃப்ரா ஆர்ச்சர்    3/19
ஜெயதேவ் உனத்கட்     2/32 
கார்த்திக் தியாகி    1/30

ராஜஸ்தான் 148/8 
பென் ஸ்டோக்ஸ்    41 (35) 
ராபின் உத்தப்பா     32 (27) 
சஞ்சு சாம்சன்    25 (18) ) 

பந்து வீச்சு
அன்ரிச் நார்ட்ஜே    2/33
துஷார் தேஷ்பாண்டே    2/37 
ரவிச்சந்திரன் அஸ்வின்    1/17

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com