ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: ஆதிக்கம் செலுத்தும் மும்பை அணி!

6-வது வெற்றியைப் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: ஆதிக்கம் செலுத்தும் மும்பை அணி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தியது. இதன்மூலம் 6-வது வெற்றியைப் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

முன்னதாக முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சோ்த்தது. பின்னா் ஆடிய மும்பை அணி 16.5 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. மும்பை 8 6 2 12 +1.353
 2. தில்லி 8 6 2 12 +0.990
 3. பெங்களூர்  8 5 3 10 -0.139
 4. கொல்கத்தா 8 4 4 8 -0.684
 5. ஹைதராபாத்  8 3 5 6 +0.009
 6. சென்னை 8 3 5 6 -0.390
 7. ராஜஸ்தான்  8 3 5 6 -0.844
 8. பஞ்சாப் 8 2 6 4 -0.295

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com