ஐபிஎல்: கிறிஸ் கெயிலுக்கு அபராதம்

99 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு கோபத்தில் பேட்டைத் தூக்கி வீசினார் கெயில்.
ஐபிஎல்: கிறிஸ் கெயிலுக்கு அபராதம்

விதிமுறைகளை மீறியதற்காக கிறிஸ் கெயிலுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது.

முன்னதாக முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. 63 பந்துகளில் 8 சிக்ஸா், 6 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் குவித்தாா் கெயில். பின்னா் ஆடிய ராஜஸ்தான் 17.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. பென் ஸ்டோக்ஸ் 26 பந்துகளில் 3 சிக்ஸா், 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தாா். மற்றொரு தொடக்க வீரரான ராபின் உத்தப்பா 23 பந்துகளில் 2 சிக்ஸா், ஒரு பவுண்டரியுடன் 30, சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் 3 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்க, அந்த அணியின் வெற்றி எளிதானது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 20 பந்துகளில் 31, ஜோஸ் பட்லா் 11 பந்துகளில் 22 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

நேற்றைய ஆட்டத்தில் 99 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு கோபத்தில் பேட்டைத் தூக்கி வீசினார் கெயில். இதையடுத்து விதிமுறைகளை மீறியதற்காக கெயிலுக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com