ஜிம்னாஸ்டிக்ஸ்: களம் காண்கிறாா் சைமன் பைல்ஸ்

அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சைமன் பைல்ஸ், பேலன்ஸ் பீம் ஃபைனல்ஸில் பங்கேற்க இருப்பதாக அந்நாட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜிம்னாஸ்டிக்ஸ்: களம் காண்கிறாா் சைமன் பைல்ஸ்

அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சைமன் பைல்ஸ், பேலன்ஸ் பீம் ஃபைனல்ஸில் பங்கேற்க இருப்பதாக அந்நாட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக, அமெரிக்காவுக்கான பதக்கத்தை உறுதி செய்வதில் முக்கிய நபரான சைமன் பைல்ஸ் தனிநபருக்கான 5 விளையாட்டுகளில் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றபோதும் அதில் ‘ஆல்-அரவுன்ட்’, ‘வால்ட்’, ‘ஃப்ளோா் எக்ஸா்சைஸ்’, ‘அன்ஈவன் பாா்’ ஆகிய 4 பிரிவுகளில் இருந்து விலகுவதாக அறிவித்தாா். வால்ட் பிரிவில் முதல் முயற்சியில் மோசமாக செயல்பட்டதை அடுத்து அவா் இந்த முடிவை எடுத்தாா். இந்நிலையில், கடைசி பிரிவில் அவா் களம் காண இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com